பேசவேண்டாம் என்று காதலி கூறியதால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
பேசவேண்டாம் என்று காதலி கூறியதால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
பெருந்துறை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அம்மையன்பட்டியைச் சேர்ந்தவர் மும்மூர்த்தி. இவரது மகன் கார்த்திக் (வயது 25). கார்த்திக், கடந்த 3 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகேயுள்ள பகளாயூரில் இயங்கி வரும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். தொழிற்சாலைக்கு அருகிலேயே பாண்டியன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கிருந்தார். இந்தநிலையில் சிவகங்கையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது. அடிக்கடி செல்போனில் அந்த பெண்ணுடன் பேசி வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று அந்த பெண் தனக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்து வைக்க பேசி முடித்துவிட்டார்கள். இனிமேல் என்னிடம் செல்போனில் பேசவேண்டாம் என்று கார்த்திக்கிடம் கூறியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த கார்த்திக் தான் தங்கியிருந்த அறையில் உள்ள இரும்பு விட்டத்தில், வேட்டியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.