தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

மகனுக்கு பேச்சுவராததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை அருகே உள்ள பையூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் உமா (வயது31). உமாவிற்கும் ஆலங்குடி மேல்மாகாணம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் (38) என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாழ்மணி தேவா (6) என்ற மகனும் யோக வர்ஷினி (2) என்ற மகளும் உள்ளனர்.

முருகானந்தம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். உமாவின் மகன் யாழ் மணி தேவாவிற்கு பிறந்ததில் இருந்து பேச்சு வரவில்லையாம். இதனால் அவனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கருப்பையா தன்னுடைய மகளை குழந்தைகளுடன் பையூரில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்து வந்து உள்ளார். அவனுக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனாலும் அவன் பேசவில்லையாம். இதனால் மனமுடைந்த உமா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண் டார். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருமணமான 7 வருடத்தில் உமா தற்கொலை செய்துகொண்டதால் இது தொடர்பாக சிவகங்கை ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story