தீக்குளித்து வாலிபர் தற்கொலை


தீக்குளித்து வாலிபர் தற்கொலை
x

தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

மதுரை வெங்கடாசலபதி நகரை சேர்ந்தவர் பாண்டி மகன் வீரமணிகண்டன் (வயது36). இவருக்கும் ராமநாதபுரம் காட்டூரணியை சேர்ந்த ரம்யா என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கும் 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. காட்டூரணி பகுதியில் வசித்து வந்த நிலையில் டைல்ஸ் வேலை தெரிந்தும் எந்த வேலைக்கும் செல்லாமல் வீரமணிகண்டன் வீட்டில் இருந்து வந்தாராம். திருமணத்திற்கு போட்ட நகைகளை விற்று ஊதாரித்தனமாக சுற்றி வந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் தனியாக மதுரைக்கு சென்றுவிட்டாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த வீரமணிகண்டன் அடகு வைத்த நகைகள் அனைத்தும் வட்டி கட்டாமல் மூழ்க போவதால் அதனை மீட்க பணம் வேண்டும் என்று கேட்டு மிரட்டி உள்ளார். அக்கம்பக்கத்தினர் எச்சரித்து அனுப்பி வைத்த நிலையில் திரும்ப வந்து பைக்கில் தயாராக கொண்டு வந்திருந்த மண்எண்ணெய்யை ஊற்றி தீவைத்து கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ரம்யாவின் தம்பி மணிகண்ட பெருமாள் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story