நர்சிங் மாணவி தற்கொலை


நர்சிங் மாணவி தற்கொலை
x

நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

சேலம்:

ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகள் ரம்யா (வயது 21). இவர் சேலம் அருகே உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும் அவர் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சிங் பயிற்சி பெற்று அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் விடுதியில் நேற்று முன்தினம் ரம்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் ரம்யா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story