தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை போஸ் ரோடு 7-வது தெருவில் வசித்து வந்தவர் உச்சிமுத்து (34). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் சென்னையில் வேலை பார்த்து வந்தார். தற்போது வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார். இவருக்கும் சுகன்யா என்பவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர் களுக்கு திருமுருகன் என்ற மகனும் தீப்தி என்ற மகளும் உள்ளனர். தீப்திக்கு இடது கை செயல்பாடு இல்லாமல் இருந்ததாம் இதனால் மனமுடைந்த சுகன்யா கடந்த மாதம் 31-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 வருடத்தில் சுகன்யா தற்கொலை செய்து இறந்து போனதால் இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story