இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை


இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
x

பர்கூர் அருகே இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

பர்கூர்:

குடும்ப தகராறு

பர்கூர் தாலுகா பட்லப்பள்ளி ஊராட்சி கொங்கன்சேரு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியா (வயது25). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.

இந்தநிலையில் சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பிரியா, அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பர்கூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி 5 ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story