புதுச்சத்திரம் அருகே சிறுமி தற்கொலை
புதுச்சத்திரம் அருகே சிறுமி தற்கொலை செய்து கொண்டாா்.
கடலூர்
சிதம்பரம்,
புதுச்சத்திரம் அடுத்து வில்லியநல்லூர் புது நகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் சூரியகலா (வயது 15). இவர் 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் உள்ளார்.
சம்பவத்தன்று சூரியகலாவை அவரது தாய் மாலா சமைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் சமைக்காமல், தனது தாயை திட்டிவிட்டு வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார்.
இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று சூரியகலா பாிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story