கிருஷ்ணகிரியில் பரிதாபம் தேர்வு முடிவுக்கு பயந்து 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை


கிருஷ்ணகிரியில் பரிதாபம்  தேர்வு முடிவுக்கு பயந்து 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
x

தேர்வு முடிவுக்கு பயந்து கிருஷ்ணகிரியில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

தேர்வு முடிவுக்கு பயந்து கிருஷ்ணகிரியில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

பள்ளி மாணவி

கிருஷ்ணகிரி அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் செல்வம். இவர் கிருஷ்ணகிரியில் ஜக்கப்பன் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் பூஜா (வயது 15). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதி உள்ளார்.

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வருகிற 20-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுக்கு பயத்தில் மாணவி மன வருத்தத்துடன் காணப்பட்டார். தேர்வை தான் சரியாக எழுதவில்லை என தோழிகளிடம் கூறியதாக தெரிகிறது.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மாணவி பூஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேர்வு முடிவுக்கு பயந்து 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story