ஓசூர் அருகே தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை


ஓசூர் அருகே  தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை
x

ஓசூர் அருகே தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் சிப்காட் அருகே பேகேப்பள்ளியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). ெதாழிலாளியான இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. இவருக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. கணவன்-மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் சுரேஷ் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வீட்டில் இருந்த சுரேஷ் கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story