கணவர் கண்டித்ததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
கணவர் கண்டித்ததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.
திருமங்கலம்,ஜூன். 24-
திருமங்கலம் நேதாஜி தெருவில் வசித்து வருபவர் பால்பாண்டி (வயது 30). இவரது மனைவி அம்சவல்லி (27). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்திருமணம் முடிந்து 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. பால்பாண்டி கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் உறவினர் இல்ல விழாவில் கலந்துகொள்ள திருமங்கலம் வந்த பால்பாண்டி அங்கு அம்சவல்லி குழந்தையை அடித்ததால் அவரை கண்டித்துள்ளார். இதனால் பால்பாண்டி மனைவி அம்சவல்லியை கண்டித்து கன்னத்தில் அறைந்ததாக சொல்லப்படுகிறது. உறவினர்கள் முன்னிலையில் கணவன் அடித்ததால் அவமானம் அடைந்த அம்சவல்லி கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து பஸ் மூலம் திருமங்கலத்திற்கு வந்துவிட்டார்.
அம்சவல்லியின் தந்தை மகளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளார். பலமுறை முயற்சித்தும் அவர் செல்போனை எடுக்கவில்லை. இந்தநிலையில் திருமங்கலத்தில் வீட்டில் அம்சவல்லி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. திருமங்கலம் நகர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.