கந்தம்பாளையம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கந்தம்பாளையம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல்
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள சீராப்பள்ளி கோடங்கிநாயக்கனூரை சேர்ந்தவர் துரைசாமி. பால் வியாபாரி. இவருக்கு தனுஷ் (17) என்ற மகனும், பிரித்திகா (14) என்ற மகளும் இருந்தனர். பிரித்திகா வசந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக தீராத நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரித்திகா நேற்று காலை அவரது வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story