பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

தர்மபுரி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி அருகே உள்ள சோகத்தூரை சேர்ந்தவர் சந்தோஷ். தொழிலாளி. இவருடைய மனைவி சத்யா (வயது 28). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த சத்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான புகாரின்பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story