10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரி அருகே 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
தர்மபுரி அருகே 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
பள்ளி மாணவன்
தர்மபுரி அருகே உள்ள பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் அஜய்குமார் (வயது 16). தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். அஜய்குமார் தனது தந்தையிடம் செல்போன் கேட்டுள்ளான். பின்னா் அவா்கள் செல்போன் வாங்க இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளனர்.
அப்போது விலை உயர்ந்த செல்போன் வேண்டும் என கூறிய மாணவன் அதற்காக தன்னிடமிருந்த ரூ.6 ஆயிரத்தையும் கொடுத்துள்ளார். செல்போன் வாங்கியபின் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது இவ்வளவு அதிக விலையில் செல்போன் தேவையா? என அவனிடம் குடும்பத்தினர் கேட்டதாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்த நிலையில் அஜய்குமார் நேற்று அதிகாலை வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு கொண்டான். உயிருக்கு போராடிய மாணவனை குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. மாணவன் தற்கொலை செய்து கொண்டது குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.