10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை
போச்சம்பள்ளி அருகே 10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மத்தூர்
10-ம் வகுப்பு மாணவி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மகாதேவ கொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவரது மகள் நித்யஸ்ரீ (வயது15). சிறுமி சந்தூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். மாணவி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவி கடந்த 17-ந்் தேதி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தாள். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பரிதாப சாவு
பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி நித்யஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.