விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கெலமங்கலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே உள்ள வன்னியாபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 40). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவர் சம்பவத்தன்று தனது மகனிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோவிந்தன் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story