பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

காவேரிப்பட்டணம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் அருகே உள்ள கொட்டாவூரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மீனாட்சி (வயது 22). இவர்களுக்கு திருமணம் ஆகி 2½ ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்தது. இதனால் மனமுடைந்த மீனாட்சி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மீனாட்சியின் தந்தை ரவி கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் விரைந்து சென்று மீனாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமான 2½ ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story