பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மாரியம்பட்டியை சேர்ந்தவர் வெற்றி செல்வன் (வயது 29). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (29). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் 2 மகள்களும் இரட்டை குழந்தைகள் ஆவர். இதனிடையே கணவன்- மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த ராஜேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அ.பள்ளிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story