பள்ளிபாளையத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிபாளையத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையத்தில் திருச்செங்கோடு சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை பின்புறம் வசித்து வருபவர் சுரேஷ்குமார் (வயது 28). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நந்தினி (26). இந்த தம்பதிக்கு ரோகித் (7) என்ற மகனும், ரோகிணி (6) என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நந்தினி திடீரென வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் நந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.