கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை


கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
x

மொரப்பூர் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

மொரப்பூர்:

மொரப்பூர் அருகே உள்ள ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சக்தி கிருஷ்ணன் (வயது 18). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். மாணவர் சரியாக படிக்காமலும், அடிக்கடி செல்போனை பார்த்தும் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவர் நேற்று முன்தினம் விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சக்தி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story