பணி இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் தற்கொலை


பணி இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் தற்கொலை
x

தொப்பூர் அருகே பணி இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வாடமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது55). இவர் காவல்துறையில் போலீஸ்காரராக பணியாற்றிய போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தொப்பூர் அருகே சவுளூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் மகேஸ்வரன் கடந்த சில மாதங்களாக தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை சவுளூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த மரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் விரைந்து சென்று மகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த மகேஸ்வரனின் சட்டை பாக்கெட்டில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story