காவேரிப்பட்டணம் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை


காவேரிப்பட்டணம் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை
x

காவேரிப்பட்டணம் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி தாலுகா தேவர்முக்குளம் அருகே உள்ள பெரியண்ணன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் பிரபு (வயது 22). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனை அவருடைய பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த பிரபு கடந்த 17-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பிரபு இறந்து விட்டார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story