தொழிலாளி தற்கொலை
நல்லம்பள்ளி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது35). கூலித்தொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மாதேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story