சேந்தமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


சேந்தமங்கலம் அருகே  இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

சேந்தமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல்

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 27). பெயிண்டர். இவருடைய மனைவி சுமதி (20). இவர்களுக்கு திருணமாகி 7 மாதங்கள் தான் ஆகிறது.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சுமதி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சேந்தமங்கலம் போலீசார் சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story