மாரண்டஅள்ளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


மாரண்டஅள்ளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அருகே உள்ள சக்கிலிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 65). தொழிலாளி. இவருடைய மனைவி சாத்தம்மாள். இந்த தம்பதிக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முனிராஜ் கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோய், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி காலை முனிராஜ் வீட்டில் விஷம் குடித்தார். இதையடுத்து அவருடைய மகள் காஞ்சனா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பலியானார். இந்த தற்கொலை குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story