வடமாநில வாலிபர் தற்கொலை
கிருஷ்ணகிரி
மத்திகிரி:
ஒடிசா மாநிலம் ஜெகாபூர் மாவட்டம் தசரதாபூர் ராய்சாகி கிராமத்தை சேர்ந்தவர் சோமியா பூஷன் தாஸ் (வயது 25). இவர் மத்திகிரி அருகே உளிவீரனப்பள்ளியில் தங்கி உப்பாரப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை செய்து வந்தார். இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்தார். இவரது காதலை அந்த இளம்பெண் ஏற்க மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த சோமியா பூஷன் தாஸ் உளிவீரனப்பள்ளியில் தான் தங்கி இருந்த வீட்டில் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story