வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே தீபாவளிக்கு புத்தாடை வாங்கி தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே தீபாவளிக்கு புத்தாடை வாங்கி தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நர்சரி பண்ணை தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கோட்டை உளிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமப்பா. இவரது மகன் சிவக்குமார் (வயது 19). இவர் தனியார் நர்சரி பண்ணையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் இருந்ததால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இந்தநிலையில் சிவக்குமார் தீபாவளிக்கு புத்தாடை வாங்கி தர வேண்டும் என தனது தந்தை ஸ்ரீராமப்பாவிடம் கேட்டுள்ளார். ஆனால் கடன் வாங்கி தான் தீபாவளி பண்டிகை கொண்டாடி வருவதாகவும், இதனால் புது துணி வாங்கி கொடுக்க மறுத்து மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் மனமுடைந்த சிவக்குமார் நேற்று முன்தினம் வீட்டு குளியல் அறையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாளிக்கு புத்தாடை வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.