தர்மபுரியில் திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை


தர்மபுரியில் திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி அக்ரி நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவருடைய மனைவி இமையா (வயது 26). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இமையா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே இமையாவின் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவருடைய உறவினர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் இமையாவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story