விவசாயி தற்கொலை


விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே மனைவி கோபித்து சென்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் புலிக்கரை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 33). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். திருப்பதிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக அவருடைய மனைவி கோபித்து ெகாண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி கோபித்து சென்றதால் மனமுடைந்த திருப்பதி அல்லியூர் அருகே உள்ள புளியந்தோப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருப்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story