தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தளி அருகே உள்ள பிக்கனப்பள்ளியை சேர்ந்தவர் சிக்கேகவுடா (வயது 35). இவர் ஓசூரில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த ஒரு மாதமாக பாலதொட்டனப்பள்ளியில் உள்ள தனது அக்காள்மல்லம்மா வீட்டில் தங்கிஇருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை விஷம் குடித்து விட்டு மல்லம்மா வீட்டின் பின்புறம் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். இந்த தற்கொலை குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story