சூளகிரி அருகே கூலித்தொழிலாளி தற்கொலை


சூளகிரி அருகே கூலித்தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே உள்ள தொட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன் (வயது 43). கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த முனிகிருஷ்ணன், வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முனிகிருஷ்ணன் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி காந்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில், சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story