ஊத்தங்கரை அருகே தொழிலாளி தற்கொலை


ஊத்தங்கரை அருகே தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை தாலுகா வெங்கடத்தாம்பட்டி அருகே உள்ள கல்லூரை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இந்தநிலையில் சின்னதம்பி கடந்த 4-ந் தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய குடும்பத்தினர் இதுகுறித்து ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story