கிருஷ்ணகிரியில் குடும்ப தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் குடும்ப தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மகன் ஹரீஷ் (வயது 18). கூலித் தொழிலாளி.
கடந்த 5-ந் தேதி இரவு ஹரீசுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்டு ஹரீஷ் தனது அறைக்கு சென்று விட்டார். மறுநாள் காலை வெகுநேரம் ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது ஹரீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து அவரது தந்தை வடிவேல் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஹரீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.