கடன் பிரச்சினையால் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் தூக்குப்போட்டு தற்கொலை


கடன் பிரச்சினையால்  நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்   அர்ச்சகர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Nov 2022 6:45 PM GMT (Updated: 10 Nov 2022 6:46 PM GMT)

கடன் பிரச்சினையால் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் கடன் பிரச்சினையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவில் அர்ச்சகர்

நாமக்கல் நரசிம்மசாமி சன்னதி தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 49). இவர் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி வித்யாலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

நேற்று காலை 6.15 மணிக்கு நாகராஜன் தனது மகள் ராஜியிடம் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்டநேரம் ஆகியும் அவர் வராததால் சந்தேகம் அடைந்த வித்யாலட்சுமி மற்றும் மகள் குளியலறை அருகில் சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த கொக்கியில் நாகராஜன் தூக்குப்போட்டு ெதாங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர்.

கடன் பிரச்சினை

இதையடுத்து நாகராஜனை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து வித்யாலட்சுமி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதில் கடன் அதிகளவில் இருந்ததாகவும், தன்னிடம் எப்படி கடனை கட்டுவது என அவர் புலம்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கடன் பிரச்சினையால் கோவில் அர்ச்சகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story