மொரப்பூர் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
தர்மபுரி
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள சிந்தல்பாடியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 77). இவர் கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பெருமாள் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெருமாள் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பெருமாளின் மகன் நாகராஜன் மொரப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story