2 பெண்கள் தற்கொலை


2 பெண்கள் தற்கொலை
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி

மத்திகிரி:

ஓசூரில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

குடும்ப தகராறு

ஓசூர் அருகே குருப்பட்டி தென்றல் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி தீபா(வயது 33). தனியார் நிறுவன ஊழியர். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தீபா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தையல் தொழிலாளி

ஓசூர் சிப்காட் அருகே சாந்தபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி சுசீலா (37). தையல் தொழிலாளி. இவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த சுசீலா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story