வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
மத்தூர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி
மத்தூர்
மத்தூர் அருகே உள்ள வாலிப்பட்டி கருக்கங்கூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சதீஷ் (வயது20). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பழனி விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story