திண்டுக்கல் அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


திண்டுக்கல் அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x

திண்டுக்கல் அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த வாைழக்காய்பட்டி, முத்தமிழ்நகரை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 65). காய்கறி வியாபாரி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் உடல்நிலை சரியாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த ரெங்கராஜ் இன்று தனது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story