பெண் தற்கொலை


பெண் தற்கொலை
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் திருமணமான 2 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் திருமணமான 2 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

குடும்ப தகராறு

ஓசூர் அருகே உள்ள பத்தலப்பள்ளியை சேர்ந்தவர் மஞ்சுநாத். தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் லால்புதுகூரை சேர்ந்த காயத்திரி என்பவரின் மகள் ஆர்த்தி (25) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 9-ந்தேதியும் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஆர்த்தி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

பரிதாப சாவு

இதையறிந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆர்த்தி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ஆர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமான 2 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story