ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் தற்கொலை
கந்திகுப்பம் அருகே திருமணமான ஒரு ஆண்டில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
பர்கூர்
கந்திகுப்பம் அருகே திருமணமான ஒரு ஆண்டில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
ஐ.டி. நிறுவன ஊழியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா கந்திகுப்பம் அருகே உள்ள பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி காந்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் டிம்பிள் மனோ (வயது 27). எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கும்மனூரை சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் கடந்த 10.12.2021 அன்று திருமணம் நடந்தது.
இவரும் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். திருமணமாகி 10 நாட்கள் கணவருடன் வசித்து வந்த டிம்பிள் மனோ குடும்ப பிரச்சினையால் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டில் இருந்தவாறு அவர் பணி செய்து வந்துள்ளார். டிம்பிள் மனோவின் பெற்றோர் வெளியே சென்று இருந்தனர்.
தற்கொலை
அப்போது மன வேதனையில் இருந்த டிம்பிள் மனோ வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கந்திகுப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமான ஒரு ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.