தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கெலமங்கலம் அருகே மகள் இறந்த சோகத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை
கெலமங்கலம் அருகே உள்ள ஜோதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 37). கூலித்தொழிலாளி. இவருக்கு வர்ஷா (10), கிருத்திகா (6) என்ற 2 மகள்கள் இருந்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிறுமி கிருத்திகா உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். மகள் இறந்த சோகத்தில் செல்வராஜ் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார்.
இதனிடையே நேற்று முன்தினம் மது போதையில் வீட்டுக்கு வந்த செல்வராஜ், மனைவியிடம் தனது மகள் வேண்டும் என கூறியுள்ளார். பின்னர் அறைக்கு சென்றவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story