காதல் தோல்வியால் வடமாநில சிறுவன் தற்கொலை
தளி அருகே காதல் தோல்வியால் வடமாநில சிறுவன் தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை
தளி அருகே காதல் தோல்வியால் வடமாநில சிறுவன் தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமாநில சிறுவன்
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் கணேஷ்மால். இவரது மகன் அக்ஷயா (வயது 17). இவன் தளி அருகே உள்ள உளிபண்டா கிராமத்தில் தங்கி விவசாய கூலி வேலை செய்து வந்தான். சிறுவன் தனது மாநிலத்தில் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.
ஆனால் காதல் கைகூடாத காரணத்தால் சிறுவன் விரக்தியடைந்து காணப்பட்டு வந்தான். சம்பவத்தன்று சிறுவன் தங்கி இருந்த பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து பொதுமக்கள் தளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.