ஏரியூர் அருகே விஷம் தின்று இளம்பெண் தற்கொலை


ஏரியூர் அருகே விஷம் தின்று இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 3:12 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

ஏரியூர்:

ஏரியூர் அருகே விஷம் தின்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இளம்பெண்

ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலை பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவருக்கு பிரபு என்ற மகனும், தமிழரசி (வயது 32) என்ற மகளும் இருந்தனர். பிரபுவுக்கு திருமணமாகிவிட்டது. திருமணமாகாத தமிழரசி நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி வயிற்று வலியால் தமிழரசி மனவேதனை அடைந்தார். அவர் திடீரென வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்றார். இதனால் அவர் வாந்தி எடுப்பதை பார்த்த அவருடைய அண்ணன் பிரபு, விசாரித்தார். அப்போது தமிழரசி எலி மருந்தை தின்றதாக கூறினார்.

தற்கொலை

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரபு, அவரை மீட்டு சிகிச்சைக்காகபென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழரசி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏரியூர் போலீசார், தமிழரசி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story