தந்தை இறந்த துக்கத்தில் மகன் விஷம் குடித்து தற்கொலை


தந்தை இறந்த துக்கத்தில் மகன் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 11 Jan 2023 1:30 AM IST (Updated: 11 Jan 2023 4:14 PM IST)
t-max-icont-min-icon

தந்தை இறந்த துக்கத்தில் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது60). விவசாயி. இவருடைய மகன் ஆனந்தன் (29). தியாகராஜன் உடல் நலக்குறைவால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தந்தையின் இழப்பை ஆனந்தனால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவர் இறந்ததில் இருந்தே சோகத்தில் இருந்து வந்தார். துக்கம் தாங்காமல் இருந்து வந்த ஆனந்தன் நேற்று முன்தினம் வீட்டிலிருந்த எலிமருந்தை மதுவில் கலந்து குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story