திருமணமான 1½ ஆண்டுக்குள்இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலைகணவரும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
கிருஷ்ணகிரியில் திருமணமான 1½ ஆண்டுகளுக்குள் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகராறு
பர்கூர் அடுத்த கோடிபுதூரை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 21). இவருக்கும் கிருஷ்ணகிரி பாரதியார் நகரை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பிரியதர்ஷினி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணை
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லட்சுமணன் கதறி அழுதார். இதையடுத்து அவரும் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் லட்சுமணனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் இறந்த பிரியதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 1½ ஆண்டுகளுக்குள் இளம்பெண் இறந்துள்ளதால் இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் விசாரணையை தொடங்கி உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.