குடும்ப பிரச்சினையில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


குடும்ப பிரச்சினையில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x

திண்டுக்கல்லில் குடும்ப பிரச்சினையில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கடைவீதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 55). இவர் மளிகை கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி பிரமிளா. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த பாலமுருகன் நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story