இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை
சிங்காரப்பேட்டை, ஓசூர் பகுதிகளில் இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
மத்திகிரி
ஓசூர் ஜவகர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள் கிரிஜா (வயது29). இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது. அந்த மாப்பிள்ளை தனக்கு பிடிக்கவில்லை என்று கிரிஜா பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். ஆனால் அவர்கள் அந்த மாப்பிள்ளையை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று மகளிடம் கூறி வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கிரிஜா வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிங்காரப்பேட்டை அருகே உள்ள சாமியார்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி சின்னத்தாய் (65). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மூதாட்டி விஷம் குடித்து விட்டு விட்டு மயங்கி கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னத்தாய் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.