உறவினர்கள் தாக்கியதால் வாலிபர் தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே தங்கை உறவுமுறை பெண்ணை காதலித்த வாலிபரை உறவினர்கள் தாக்கினர். இதனால் மனமுடைந்த வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே தங்கை உறவுமுறை பெண்ணை காதலித்த வாலிபரை உறவினர்கள் தாக்கினர். இதனால் மனமுடைந்த வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
உறவினர்கள் தாக்குதல்
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் ஊராட்சி போலுகாக கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் கிரிஷ் (வயது 19). இவர் ஈரோடு மாவட்டத்தில் ஒரு நூல் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். பொங்கல் பண்டிகைக்காக வாலிபர் ஊருக்கு வந்து இருந்தார். இவர் தங்கை உறவு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த பெண் கிரிஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். இதை அறிந்த பெற்றோர் மகளை தேடி வாலிபரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாலிபர் மற்றும் அந்த பெண்ணை அடித்து உதைத்தனர். பின்னர் அந்த பெண்ணை அவர்கள் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டனர்.
வாலிபர் தற்கொலை
உறவினர்கள் தாக்கியதால் மனமுடைந்த வாலிபர் கிரிஷ், அதேபகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் பெற்றோர் உள்பட 6 பேரை கைது செய்தனர்.