காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம்

காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதலி சாவு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாறு தெருவை சேர்ந்தவர் காந்தி மகன் பாலபிரதீபன் (வயது 20). இவர் புதூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தாராம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதன் காரணமாக பாலபிரதீபன் மன வருத்தத்தில் இருந்து வந்தாராம். இதையடுத்து அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகம் பகுதியில் உள்ள சலூன் கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து ராமநாதபுரம் வந்துள்ளார்.

கடையில் வேலை பார்த்து கொண்டு அங்கு ஒரு அறை எடுத்து தங்கி இருந்தார். நேற்று முன்தினம் மதியம் சாப்பிட்டு வருவதாக கூறி அறைக்கு சென்ற பாலபிரதீபன் மீண்டும் கடைக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கடையில் இருந்தவர்கள் அந்த அறைக்கு சென்று பார்த்தனர்.

வாலிபர் தற்கொலை

அங்கு அறையில் இருந்த மின்விசிறியில் பாலபிரதீபன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாலபிரதீபனின் தந்தை காந்தி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story