தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நெல்லுகுந்தி கிராமத்ைத ேசர்ந்தவா் சிவக்குமார் (வயது42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராணி (34). இந்த தம்பதிக்கு அஜய்நாத் (13) என்ற மகனும், பிரகதிகா (10) என்ற மகளும் உள்ளனர். சிவகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
இதனால் அவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக ஊர் பெரியவர்கள் கணவன்-மனைவியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவு சிவக்குமார் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
பரிதாப சாவு
இதனால் மனமுடைந்த ராணி வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் சத்தம் போட்டுள்ளான். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ராணியை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது ராணி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராணி குடும்ப தகராறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.