குடும்ப தகராறில் விபரீதம்: விஷம் குடித்து பெண் தற்கொலை


குடும்ப தகராறில் விபரீதம்: விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை.

சிவகங்கை

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ள செந்தலயன்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு. இவருடைய மனைவி பொன்னாள் (வயது 36). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக பொன்னாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புழுதிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னாள் உடலை கைப்பற்றி சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story